எழுத்துச் சீரழிவுப் போக்கு தொடங்கிடுச்சுங்கோ..


தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டது. மேலே உள்ள படத்தை ஊன்றிப் பார்க்கவும்

சீர்திருத்த அழிவி செந்தமிழின் வரிவடிவத்தைச் சிதைத்துச் சின்னபின்னப்படுத்தும் வேலையைத் தொடங்கிவிட்டது.

அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கீழே உள்ள செய்தியைப் பார்க்கவும். இது மின்னஞ்சல் வழியாக வந்தச் செய்தி. அது அப்படியே இங்கு தரப்படுகிறது.


********* மின்மடல் செய்தி *********


இன்றைக்கு (19.6.2010) ஜீமெயில் ஆட்சென்சில் செந்தமிழ் சம்பந்த படுத்தி விளம்பரம் காட்டுச்சு.

இத்துடன் இணைக்கப் பட்டுள்ள ஒளிபடம்.

அந்த விளம்பரம் இருக்கும் சுட்டி...


.. இது தான் எழுத்து சீர்த்திருத்தமா என்று எனக்கு மயக்கமே வந்திடுச்சு.... :( :(

ஆண்டவா டமீல் பீப்பிள்களிடம் இருந்து தமிழைக் காப்பாற்றப்பா...

(எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும். சரியான தமிழ் உள்ளீட்டு கருவி இல்லை.)

அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
மின்னஞ்சல்: tamilpayani@gmail.com

3 கருத்துகள்:

Justin Jeevaprakash சொன்னது…

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் எரிச்சல் கிளம்புகிறது.....!

இரா.சுகுமாரன் சொன்னது…

இப்போது அஞ்சுவதற்கு ஏதுமில்லை.

எனினும் தொடந்து குழப்பிக் கொண்டிருந்தால் வேறு மாதிரியாகத்தான் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

Ilakkuvanar Thiruvalluvan சொன்னது…

விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி விழும் ஏனெனில் எழுத்துச் சீர்திருத்தம் என்னும தலைப்பிலான கருத்தமர்வு மாநாட்டில் இருந்து எடுக்கப்பட்டு மொழியியல் என்னும் தலைப்பில்தான் அவை பற்றிய கட்டடுரைகள் வாசிக்கப்பட உள்ளன. நம் எதிர்பபிற்கு அரசு பணிந்துள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும். 9செம்மொ ழி மாநாடாக இருந்தால் இத்தலைப்பு எடுக்கப்பட வேண்டும் என வேண்டி வந்த எனக்கும் பெரு மகிழ்ச்சியே. எழுத்துச் சிதைவிற்கு எதிர்ப்பாக நிகழ்ச்சிகள் நடததியவர்களுக்கும் இணையப் பதிவாளர்களுக்கும் பெரு வெற்றியே. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்