சீனத்தைக் காட்டி தமிழைச் சீர்திருத்தும் சதிநாச வேலை


இ, ஈ, உ, ஊகார வரிசையில் உள்ள 72 எழுத்துகளைச் சீர்திருத்த வேண்டும் என்று அறிவாளிகள் கும்பலொன்று அறிவிலித்தனமாக இயங்கிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆய்வுக்குரிய தருக்கங்களையோ அல்லது அறிவுக்குப் பொருந்திய ஏரணங்களையோ அல்லது பகுத்தறிவுடன் கூடிய வாதங்களையோ முன்வைக்க மாட்டாமல், உப்புச் சப்பில்லாத காரணங்களை முன்வைத்து எழுத்துச் சீர்திருத்தத்தைப் பரப்புரை செய்கிறார்கள். அவை:-

1.இந்தச் சீர்த்திருத்தத்தால் தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்மை நிறைவு பெறும்.

2.சீன மொழி மிகப்பெரிய சீர்திருத்ததிற்கு உள்ளாகினதால் இன்று வளர்ச்சி அடைந்திருக்கிறது.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதையாக மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லி - அறைத்த மாவையே அறைப்பது போல - துவைத்த துணியையே துவைப்பது போல இந்த இரண்டு காரணங்களை மட்டுமே வாயில் நுரைதள்ள சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ‘எழுத்துச் சிதைப்பாளர்கள்’.

ஆனால், அந்தச் சிதைப்பாளர்களின் வாதங்களை அடித்து நொறுக்கும் வகையில் அண்மையில் ஐயா நாக.இளங்கோவன் அவர்கள் ஆழமான ஆய்வினை வெளியிட்டுள்ளார். கடந்த மே16இல் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய ‘எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாட்டில்’ இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

இப்போது, அது காணொளி வடிவத்தில் வந்திருக்கிறது; தமிழ் எழுத்து மாற்றத்திற்கு சீன மொழியை மேற்கோள் காட்டிப் பேசும் ‘எழுத்துச் சிதைப்பாளர்களின்’ வாதங்களை தூள்தூளாக்கிப் போடுகிறது.

அதுமட்டுமல்லாமல், தந்தை பெரியாரைக் காட்டிக் காட்டி கருத்து பர(ச)ப்பும் ‘எழுத்துச் சிதைப்பாளர்களின்’ முகமூடியை ‘டர்ர்ர்ர்ர்ர்ரென’ கிழித்துப் போடுகிறது. பகுத்தறிவு பேசிய பெரியாரின் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் சதிகாரர்களின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

அனைவரும் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய காணொளி இது. அறிவுடைமைப் பண்பும் நடுநிலைப் போக்கும் உடையவர்கள் அமைதியாகக் கண்டு - கேட்டு - சிந்தித்து - சீர்தூக்கிப்பார்க்க வேண்டிய அரிய காணொளி இது.

பகுதி 1">பகுதி 2">பகுதி 3

3 கருத்துகள்:

ரவிசங்கர் சொன்னது…

அருமையான ஒப்பீடு. நன்றி.

அகரம் அமுதா சொன்னது…

மிகத்தேவையான சிறந்த காணலை. இதை இவ்வேளையில் அனைவருக்கும் காண இடுகையிட்ட தங்களின் தமிழ்ப்பற்றையும் எழுத்துச் சிதைவை எதிர்க்கும் துணிவையும் எண்ணி வணங்குகின்றேன்

tamilnanbarkal.com சொன்னது…

விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ
http://athiradenews.blogspot.com/2010/06/blog-post_10.html