இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய் வரிசைகளின் சீர்மை பற்றிய விளக்கக் காணொளி கீழே தரப்பட்டுள்ளது. இதனை முழுமையாகக் காண்பதன் வாயிலாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள எழுத்துச் சீர்மை பற்றி அறிந்துகொள்ள முடியும்.
- காணொளியைக் காணும் அதே வேளையில், இதில் விளக்கப்படும் எழுத்துச் சீர்மை எந்த அளவுக்குத் தமிழுக்குப் பயனளிக்கக் கூடியது; எந்த அளவில் தமிழை வளர்த்தெடுக்கும்; இன்றைய கணினி ஊழியில் எந்த அளவுக்குத் தமிழை மேம்படுத்தும் என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டும்.
எழுத்துச் சீர்மைக்காக முன்வைக்கப்படும் கரணியங்கள், விளத்தங்கள், சான்றுகள் ஏரணமாக இருக்கின்றனவா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
- தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டும் முன்வைத்துச் சிந்திக்காமல் உலகத் தமிழர்களையும் சிந்தனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டு இக்காணொளியைக் காணவேண்டும்.
காணொளியைக் கண்ட பிறகு, தமிழில் இதற்கு முன்னர் செய்யப்பட்டுள்ள எழுத்துச் சீர்மைகளின் வரலாற்றைத் தேடிப்படித்து ஏரணச் சிந்தையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
காணொளியைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக