தமிழ் படிக்காமைக்கு எழுத்துகளல்ல சிக்கல்


அமெரிக்கா வாழ் தமிழரின் குழந்தைகள் பலர் தமிழைப் படிக்காமல் இருப்பதற்கு எழுத்துகளிலுள்ள சிக்கலெல்ல. முழுமையாக பெற்றோர்களின் ஈடுபாடுதான். பெரும்பாலான பெற்றோர்கள் தாங்களே குழந்தைகளில் தமிழ் பேசுவதை விட்டுவிட்டார்கள்.

தாய்மொழி மேல் (இங்கு வேண்டுமென்றே நான் தமிழ் என்று குறிப்பிடவில்லை, தாய்மொழி என்று குறிப்பிடுகிறேன்) உண்மையிலேயே பற்றுள்ள பெற்றோர்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுகிறார்கள். வார இறுதியில் நடக்கும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி எழுத்துகளையும், சொற்களையும், மொழியையும் மேலும் கற்கச்சொல்கின்றனர்.

இக்குழந்தைகள் எல்லாம் 50-60 மணி நேரப் பயிற்சியிலேயே புழக்கத்தில் அதிகம் பயன்படுத்தப் படும் அனைத்து எழுத்துகளையும் கற்று விடுகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக வாசிங்டன் பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் இதை உறுதியாகச் சொல்கிறேன்.

நகைச்சுவை என்னவென்றால் எழுத்து மாற்றத்தை ஆதரிக்கும் பலரின் பேரக் குழந்தைகள்தான் தமிழைப் படிப்பதில்லை, தமிழில் பேசுவதில்லை. ஆடத்தெரியாத நாட்டியக் காரர்கள் தெருக்கோணல் என்று சொன்ன பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கொடுமையென்னவென்றால் இவர்கள் நினைக்கிறபடி தமிழ் எழுத்துகள் இருக்க வேண்டுமென்பதால்தான் தமிழ் யுனிகோடும் நொண்டியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

தமிழ் யுனிகோட்டுக்கு இந்த எழுத்து மாற்றம் அவசியம் என்று பொய்யுரைகளைப் பரப்பித் திரிகின்றனர். தம்முடைய அரசியல்பலம் கொண்டு எப்படியாவது இதைச் சாதிக்க நினைக்கிறார்கள்.


  • எழுத்தாக்கம்:-

  • சொர்ணம் சங்கர்

  • மின்னஞ்சல்:-mailto:-m-sornam@gmail.com

1 கருத்து:

Virutcham சொன்னது…

நீங்கள் செய்வது கண்டிப்பாக தமிழ் சேவை தான். வாழ்த்துக்கள்.
கலிபோர்னியா விலும் நிறைய இந்தியக் குழந்தைகள் இது மாதிரி பள்ளிகளில் தமிழ் கற்கிறார்கள்.
இன்றைய காலத்து பிள்ளைகளுக்கு தமிழ் மேல் இருக்கும் ஆர்வம் குறித்த எனது பதிவு


http://www.virutcham.com/2010/01/22/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/